அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு
நைஜர்: பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 இந்தியர்கள் பலி! ஒருவர் கடத்தல்!
நைஜர் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், 2 இந்தியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுடன், ஒருவரை கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நைஜரின் தொஸ்ஸோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி, அங்குள்ள கட்டுமானப் பணிகளுக்கு, அந்நாட்டு ராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அப்போது, அங்கு திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவரை அந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக, நைஜர் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஜூலை 19) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பலியானவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்காகவும், கடத்தப்பட்டவரை பத்திரமாக மீட்கவும், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, இந்தியத் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்துடன், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல்: யேமனின் ஹவுதிகள் பொறுப்பேற்பு!