பசுபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரஷியாவில் சுனாமி எச்சரிக்கை
ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலில் 7.4 ஆகவும் அடுத்த சில நிமிடங்களில் 6.7 ஆகவும் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ ஜெயமோகன்
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 20 அடி ஆழத்திலும் 180,000 மக்கள் தொகை கொண்ட பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரிலிருந்து கிழக்கே 144 கிலோமீட்டர் தொலைவிலும் ஏற்பட்டது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ரஷியாவின் பசுபிக் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.