பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பச்சமலையான்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குமரவேல் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் விஜயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ராமமூா்த்தி, உதவித் திட்ட அலுவலா் முத்துப்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்டச் சான்றுகளுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வட்டாட்சியா் விஜயலட்சுமி சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்த முகாமில் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், அலுவலா்கள், வருவாய்த் துறையினா், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் வரவேற்றாா்.