பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை!
பஞ்சாபின் சப்பேவால், கிதர்பாஹா மற்றும் தேராபாபா நானக் ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
பஞ்சாப் மாநிலத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. அதில் கிதர்பாஹா, தேரா பாபா நானக், சப்பேவால் (எஸ்சி) மற்றும் பர்னாலா ஆகிய இடங்களுக்கு நவம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பஞ்சாபின் பர்னாலா தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், மற்ற மூன்று தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.
தேரா பாபா நானக்கில், ஆம் ஆத்மி கட்சியின் ஹர்தீப் சிங் டிம்பி தில்லான் 1,044 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங்கின் மனைவியுமான அம்ரிதா வாரிங்கை எதிர்த்து முன்னணியில் உள்ளார்.
பாஜக வேட்பாளரும், பஞ்சாப் முன்னாள் நிதி அமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சப்பேவாலில் ஆம் ஆத்மி வேட்பாளர் இஷாங்க் குமார் சப்பேவால் 3,308 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரும் காங்கிரஸ் வேட்பாளருமான ரஞ்சித் குமாரை எதிர்த்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு முன்னிலை வகித்தார்.