செய்திகள் :

'பட்டாவுக்கே ரூ. 5,000 வாங்குறோம்; மணலுக்கு ரூ. 50,000 கொடுங்க!' - பேரம் பேசிய வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சரவணன். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மணல் வியாபாரியிடம், 'நீங்கள் மண் அள்ளுவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எனக்கு மாதந்தோறும் ரூ 50,000 லஞ்சம் தர வேண்டும்' என பேரம் பேசி புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பே ரூ. 20,000 லஞ்சம் வாங்கும் வீடியோ மற்றும் பேரம் பேசும் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், அடுத்து வெளியான ஒரு வீடியோவில் புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ள நிலையில் அங்கு வரும் நபர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் பேசுவது பதிவாகியுள்ளது. அதில், வி.ஏ.ஓ சரவணனிடம், 'நீங்கள் ரூ. 50,000 கேட்டீர்களாம்' என்று கூறும் அந்த நபர் ஐந்தாயிரம் தருவதாக கூறுவதும், அதற்கு வி.ஏ.ஓ, 'பட்டாவிற்கே ஐந்தாயிரம் வாங்குகிறோம். இப்போது, ரூ. 20,000 மாவது கொடுங்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், 'நாங்கள் ரெகுலராக ஓட்டுவது இல்லை' என பேசுவதும், இறுதியாக வி.ஏ.ஓ இருபதாயிரம் கேட்பதும் பதிவாகியிருந்தது.

trichy

அதேபோல், மற்றொரு வீடியோவில் புத்தாநத்தம் காவல் நிலையம் முன்பு ஒரு மரத்தடியில் கருப்பு சட்டை அணிந்துள்ள ஒரு வாலிபர் வி.ஏ.ஓ சரவணனிடம் பேசி, 'அடுத்து ஆர்டர் வரும் போது உங்களிடம் சொல்லிவிட்டே செய்கிறேன். பார்த்து பண்ணிக்கலாம்' என்று கூறி தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து வி.ஏ.ஓ-விடம் கொடுப்பதும், அதை அவர் வாங்கி வைத்துக் கொள்வதும் பதிவாகி இருந்தது. இதேபோல், தொலைபேசி உரையாடலில், 'வண்டி ஓட்டும்போது தகவல் கொடுங்கள். ஜோனல், டி.டி அனைவரும் ரவுண்ட்சிலதான் இரவு பகலாக உள்ளனர். எனக்கு பிரச்னை வந்துவிடும். உங்களை செய்ய வேண்டாம் என்று கூறவில்லை' என வி.ஏ.ஓ கூற, 'நான் பர்மிட் போட்டு தான் ஓட்டினேன். இப்பொழுது ஒரு நடை அவசரம் என்பதால்தான்' என்று பேசினார். அதற்கு வி.ஏ.ஓ, 'நான் ஒன்னும் பிரச்னை எல்லாம செய்யவில்லை. பார்த்து செய்யுங்கள்' என்பதும், 'நீங்கள் 50,000 ரூபாய் கேட்டீர்களாம். அவ்வளவு எல்லாம் செய்ய முடியாது' என்று மணல் வியாபாரி பேசுவதும், 'மேலே வரை தகவல் சென்று விட்டது. மேலேயும் நான் சொல்லி இருக்கேன். இப்போதைக்கு பார்த்து செஞ்சி விடுங்க. நாம மாதம் என்ன என்பதை ஒன்றாம் தேதிக்கு மேல் பேசிக்கொள்ளலாம்' என உரையாடல் தொடர்கிறது. இந்த வீடியோ மற்றும் ஆடியோவை மணல் வியாபாரியே ரிலீஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பேசியபடி பணம் வராததால் மணல் கடத்தல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு வி.ஏ.ஓ-வே மற்றொருவர் பெயரில் புகார் அனுப்பியதாகவும், இதனை தெரிந்து கொண்ட மணல் வியாபாரி தற்போது லஞ்சம் வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வி.ஏ.ஓ லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான நிலையில், அது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க