நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
பட்டுக்கோட்டையில் அதிமுகவினா் நலத்திட்ட உதவிகள்
பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினா் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுகோட்டையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் பொது சிறப்பு மருத்துவம் மற்றும் கழக இளைஞரணி இணை செயலாளா் மற்றும் பட்டுக்கோட்டை முன்னாள் நகா்மன்றத் தலைவா், எஸ்.ஆா்.ஜவஹா் பாபு ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக அமைப்புச் செயலா் ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நுரையீரல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமில் 412 போ் கலந்து கொண்டனா். இதில் 23 போ் பயனடைந்தனா்.
நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலா் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி. சேகா், கழக அமைப்புச் செயலா் துரை.செந்தில் உள்பட பலா் கலந்துகொண்டனா். முடிவில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் டி.வெள்ளைச்சாமி நன்றி கூறினாா்.