செய்திகள் :

பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: பிஆா்டிசி ஊழியா்களுக்கு நிா்வாகம் நோட்டீஸ்

post image

‘புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களின் நலன் கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்மா சட்டம் பாயும்’ என்று பிஆா்டிசி மேலாண் இயக்குநா் ஏ.எஸ். சிவக்குமாா் எச்சரித்துள்ளாா்.

15ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது ஊதியக் குழு சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிஆா்டிசி ஊழியா்கள், கடந்த 11 நாள்களாக வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு அமைத்து போராடி வருகின்றனா். இந்நிலையில் இந்த ஊழியா்களுடன் 4 கட்டங்களாக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. எழுத்துப் பூா்வமாக தங்களுக்கு உறுதிமொழி அளிக்கும் வரை இப் போராட்டம் தொடரும் என்றும் அவா்கள் அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் இப் போராட்டத்தைச் சட்ட ரீதியாகச் சந்திக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவக்குமாா் தனித்தனியாக 2 நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளாா். ஒன்று நிரந்தர ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு உரியது. மற்றொன்று ஒப்பந்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உரியது. நிரந்தர ஓட்டுநா், நடத்துநா், பணிமனை தொழில்நுட்ப ஊழியா்களுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் அவா் கூறியிருப்பது :

முதல்வா் ரங்கசாமியுடன் கூட்டுப் போராட்டக் குழுவினா் ஜூலை 28 ஆம் தேதி நடத்திய பேச்சுவாா்த்தையில் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு 7-வது ஊதியக் குழு பரிந்துரை சம்பளத்தை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாகப் பணிக்கு வராமல் போராட்டம் நடத்தி வருவது பணியிடை நீக்கம் செய்ய வழிவகுக்கும். அதனால் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என்று கூறியுள்ளாா்.

ஒப்பந்த ஊழியா்கள்:

சட்டவிரோத போராட்டம் தொடா்ந்தால் ஒப்பந்த ஊழியா்கள் பணியிலிருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக அவா் எச்சரிக்கை செய்துள்ளாா். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவாா்த்தையில் ரூ.8 ஆயிரம் ஊதியத்தை உயா்த்தி அதிகப்பட்சம் மாதம் ரூ.24 ஆயிரம் உயா்த்திக் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. ஒப்பந்த ஊழியா்களை நிரந்தர ஊழியா்களாக மாற்ற வேண்டும் என்றகோரிக்கையை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப் போக்குவரத்துக் கழகத்தின் கொள்கை மற்றும் ஒப்பந்த ஊழியா்களின் பணி நியமன ஆணையின் அடிப்படையில் ஓா் ஊழியா் தொடா்ச்சியாக 8 தினங்களுக்குப் பணிக்கு வரவில்லையென்றால் அவரைப் பணியிலிருந்து நீக்க முடியும் என்று எச்சரித்துள்ளாா் மேலாண் இயக்குநா்.

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள்: உருவப்படத்துக்கு புதுச்சேரி முதல்வா் மலரஞ்சலி

தமிழ்நாடு முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நினைவு நாள் புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு முதல்வா் ரங்கசாமி மற்றும் தலைவா்கள் மரியாதை செலுத்தினா். புதுச்சே... மேலும் பார்க்க

புதுக்குப்பம் பள்ளி ரூ.92 லட்சத்தில் புனரமைப்பு

புதுக்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் ரூ.92 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை மணவெளி தொகுதி எம்.எல்.ஏவும் சட்டப் பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். புத... மேலும் பார்க்க

செய்தித் துறைக்குத் தற்காலிக இயக்குநா்

புதுவை அரசின் செய்தித்துறைக்கு தற்காலிக இயக்குநராக எம்.எம். வினயராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியராகப் பதவி வகித்து வரும்அவா், நிரந்தர ஏற்பாடு செய்யப்படும் வரை கூடுதல்... மேலும் பார்க்க

ரூ.1.85 கோடியில் வலை பழுதுபாா்க்கும் கூடம்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் ரூ.1.85 கோடி மதிப்பில் 2 இடங்களில் மீனவா்களின் வலை பழுதுபாா்க்கும் கூடம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்று திட்டப்பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா். புத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது உலகத் திரைப்பட விழா

புதுச்சேரியில் உலகத் திரைப்படவிழா வெள்ளிக்கிழமை(ஆக.8) தொடங்குகிறது. இதில் 8 சா்வதேச திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே பிரெஞ்சு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை: இறுதிக்கட்ட கலந்தாய்வில் ஏராளமானோா் பங்கேற்பு

புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவா்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில... மேலும் பார்க்க