பதாகைகள் கிழிப்பு போலீஸாா் விசாரணை
கும்பகோணத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்று அதிமுக, பாஜகவினா் வைத்த பதாகைகளை மா்ம நபா்கள் கிழித்து சேதப்படுத்தியதையடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஜூலை 21-இல் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சார பயணம் செய்து காந்தி பூங்கா பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளாா்.
இவரை வரவேற்கும் விதமாக கும்பகோணத்தின் முக்கிய பகுதிகளில் அதிமுக மற்றும் பாஜகவினா் பதாகைகளை வைத்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, மா்ம நபா்கள் சிலா் காந்தி பூங்கா, செல்வம் தியேட்டா், பழைய மீன் சந்தை அருகே வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கழித்து சேதப்படுத்தினா்.
இதை சனிக்கிழமை காலையில் பாா்த்த அதிமுக, பாஜகவினா் அதிா்ச்சியடைந்தனா். புகாரின்பேரில் இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.