செய்திகள் :

பந்தலூர்: காயங்களுடன் தனியார் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை; தொடரும் துயரம்!

post image

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டுயிர்கள் தனியார் பெருந்தோட்டங்களில் தஞ்சமடைந்து வரும் நிலையில், தோட்டங்களில் மர்மமான முறையில் இறக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பந்தலூர் அருகில் சுருக்கு வலை கம்பியில் சிக்கி கடந்த வாரம் புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்து. இதேபோல் பந்தலூர் அருகில் உள்ள பிதர்காடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து கிடந்த சிறுத்தை

இந்நிலையில், பந்தலூர் புஞ்சை வயல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். உடலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சிறுத்தை உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்து உடல் பாகங்களை சேகரித்துள்ளனர். சிறுத்தையின் உடலை அதே பகுதியில் எரியூட்டியுள்ளனர்.

சிறுத்தையின் இறப்புக்கான காரணம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், "சுமார் 6 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சிறுத்தை மற்றொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட மோதலின் போது காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறோம். சுருக்கு வைத்து புலி கொல்லப்பட்டது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தனியார் தோட்டத்தில் கடந்த வாரம் இறந்து கிடந்த சிறுத்தை தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம் " என்றனர்

கொல்லப்பட்ட புலி

இது குறித்து தெரிவித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், "காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் தங்களின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து வருகின்றன. வனத்தை ஒட்டியே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் தனியார் தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. இதனால் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மனித - வனவிலங்கு எதிர்கொள்ளலும் அதிகரித்து வருகிறது. தனியார் தோட்டங்களில் நடமாடும் வனவிலங்குகளை கண்காணிக்க வனத்துறை மூலம் சிறப்பு குழு அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.

Fengal Cyclone: உருவானது ஃபெங்கல் புயல்... 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்; சென்னைக்கு என்ன?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று கடந்த சில மணிநேரங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதுகுறித... மேலும் பார்க்க

Tiger: காட்டின் தலைமகன்; வனத்தின் காவலன்; ஆனால், கூச்ச சுபாவி...புலிகளின் இயல்புகள் தெரியுமா?

புலி ஒரு கூச்ச சுபாவியான விலங்கு. அது மனிதனைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடும். அப்படிப்பட்ட புலிகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, வேறு வழியில்லாமல் அவை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நு... மேலும் பார்க்க

Bird Migration: `கண்டம் விட்டு கண்டம் வலசை போகும்போது பறவைகள் தொலைந்து போகாதா?’ - ஆச்சர்ய தகவல்கள்

வட கிழக்கு பருவ மழை ஆரம்பிச்சிடுச்சு. இந்த காலகட்டத்துலதான் பறவைகள் 'வலசை போதல்' நிகழ ஆரம்பிக்கும். இந்த மழை மாதங்கள்ல சில பறவைகள் தாம் வசிக்கிற அதே நாட்டுக்குள்ள ஓரிடத்துல இருந்து ஓரிடத்துக்கு இடம் ப... மேலும் பார்க்க

Chennai Rain: சென்னையில் கொட்டிய கனமழை... பாதுகாப்பாக்க நிறுத்தப்படும் படகுகள்! | Album

Chennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai RainChennai ... மேலும் பார்க்க

Rain Alert: நாளை வலுப்பெறும் புயல்... 29-ம் தேதி வரை கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?!

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், அதனால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானில... மேலும் பார்க்க