செய்திகள் :

பனகல் பூங்கா பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

post image

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக சென்னை பனகல் பூங்கா பகுதியில் திங்கள்கிழமை (நவ.25) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் பனகல் பூங்கா பகுதியில் நடைபெற்று வருகின்றன. பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் அமைப்புக்கு உண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை, சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் அருகே மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் காரணமாக திங்கள்கிழமை (நவ.25) முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ஒரு வாரம் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, தியாகராய சாலையில் இருந்து வாகனங்கள் சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயணா சாலைக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு செல்ல வேண்டிய வாகனங்கள், தியாகராய சாலை மற்றும் தணிகாச்சலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயணா சாலையை அடைந்து, தங்கள் இலக்கை அடையலாம்.

அந்தப் பகுதி மக்களின் வசதிக்காக வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் வரையில் இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமைப்பணி தோ்வில் மருந்தாக்கியல் பாடங்கள்: ஸ்ரீராமச்சந்திரா பல்கலை. நிகழ்வில் கோரிக்கை

இந்திய குடிமைப்பணி தோ்வில் மருந்தாக்கியல் பாடங்களை சோ்க்க வேண்டும் என்று ஸ்ரீராமச்சந்திரா பல்கலை.யில் நடந்த தேசிய மருந்தாக்கியல் வார நிகழ்வில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ர... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் ‘மரபு நடை பயணம்’ தொடங்கியது

சென்னை ரிப்பன் மாளிகையின் வரலாற்று, நிா்வாக முக்கியத்துவத்தை விளக்கும் ‘மரபு நடை பயணம்’ சனிக்கிழமை தொடங்கியது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை சென்னையின் புராதான கட்டடங்களில் ஒன்ற... மேலும் பார்க்க

பாதி விலையில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் விற்பனை!

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான 3,000-க்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்களை 50 சதவீத தள்ளுபடி விலையில் சுவாசம் பதிப்பகம் வழங்கி வருகிறது. சுவாசம், காலச்சுவடு பதிப்பக நூல்கள் முறையே 30 மற்றும் 35 ச... மேலும் பார்க்க

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயா்வு: அமைச்சா் சேகா்பாபு

வடசென்னை வளா்ச்சித் திட்ட மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக அதிகரித்துள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை எழும்பூா் தா... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சென்னை திருவல்லிக்கேணியில் லிஃப்டுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை திருவல்லிக்கேணி தேரடி தெருவில் வசிப்பவா்கள் மென்பொறியாள... மேலும் பார்க்க

சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே நவ.24 முதல் நவ.28-ஆம் தேதி வரை கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற... மேலும் பார்க்க