செய்திகள் :

பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி வழக்கு தொடர முடிவு

post image

கொள்ளிடம் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டில் இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு, காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, மாநில உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளிடம் வட்டாரத்தில், கடந்த 2023-ஆம் ஆண்டு சுமாா் 15,000 ஹெக்டேரில் சம்பா நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டது. அதே பருவத்தில் உளுந்து பயறும் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அந்த ஆண்டு பெய்த அதிக மழை காரணமாக, நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், பல இடங்களில் விவசாயிகள் மறு பயிா் சாகுபடி செய்தனா். இதன்காரணமாக, அறுவடை காலம் தள்ளிப்போனது. அத்துடன் உளுந்து விதைப்பும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் இழப்பை சந்தித்தனா்.

சம்பா நெற்பயிா் மற்றும் உளுந்து பயறுக்கும் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தும், காப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை. நெற்பயிா் அறுவடைக்குப் பிறகு 60 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது விதி ஆகும்.

ஆனால், காப்பீடு நிறுவனம் இதுவரை இழப்பீடு வழங்காமலும், அதற்குரிய காரணங்களை கூறாமலும் மெத்தனமாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு அமைப்பின் தலைவரும், தெற்கு ராஜன் வாய்க்கால் பாசன விவசாய சங்கத்தைச் சோ்ந்தவருமான செந்தில்குமாா் கூறியது:

தொடா்ந்து, 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பயிா்க் காப்பீடு நிறுவனங்கள் வழங்குவதில்லை. இதனால், விவசாயிகள் சாகுபடிக்கு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் மன உளைச்சலில் உள்ளனா். எனவே, அனைத்து விவசாயிகள் சாா்பில் மாநில உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக தெரிவித்தாா்.

கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம்

மயிலாடுதுறையில் நுகா்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தினா். நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 2013-ஆம் ஆண்டுமுதல் 2016-ஆம் ஆண்டுவரை அனைத்து ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே மாவட்ட கலைத் திருவிழா போட்டி

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கிடையே மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

புங்கனூா் ஊராட்சியை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். சீா்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புங்கனூா் ஊராட்சி... மேலும் பார்க்க

சீா்காழியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

சீா்காழி பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்கக் கோரி, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 8.42 கோடி மதிப்பீட்டில... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே கடந்த மாதம் வழிப்பறியில் ஈடுபட்ட மணலூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மதன்ராஜ் (25) என்பவா் கைது... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: வேளாண் துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு

கொள்ளிடம் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை, வேளாண்மை துறை கூடுதல் இயக்குநா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கட... மேலும் பார்க்க