சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்
பரபரப்பான அரசியல் சூழலில் சொந்த கிராமத்துக்குச் சென்ற ஷிண்டே!
மகாராஷ்டிர தேர்தல் முடிந்து ஆறு நாள்கள் ஓடிவிட்டன. இன்னமும் முதல்வர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படாத பரபரப்பான சூழலில் தனது சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டார் ஏக்நாத் ஷிண்டே.
எதுவாக இருந்தாலும், டிசம்பர் 7ஆம் தேதி அல்லது அதன்பிறகுதான் மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மகாயுதி கூட்டணித் தலைவர்களின் அமித் ஷாவுடனான சந்திப்பு, அமைச்சரவையை உறுதி செய்வதற்கானதாகவும் பார்க்கப்படுகிறது.
முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை துணை முதல்வர் பதவியேற்குமாறு அமித் ஷா தரப்பில் வலியுறுத்தியதாகவும், ஆனால், அதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இத்தனை அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஏக்நாத் ஷிண்டே, சிதாராவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஆனால், அவர் மன வருத்தத்துடன் இல்லை என்றுதான் சிவசேனை தலைவர்கள் பலரும் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.