செய்திகள் :

பல்லடம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை!

post image

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசிபாளையம் வலுப்புரம்மன் கோயில் அருகே தோட்டத்து வீட்டில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அமலாத்தாள் ஆகியோர் தங்கள் மகன் செந்தில் குமாருடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 3 பேரும் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதையும் படிக்க : புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..

வீட்டில் இருந்து நகை, பணம் உள்ளிட்டவை திருடு போயுள்ளதா? கொள்ளைக்காரர்களால் மூவரும் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடலையும் உடல் கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூா் ஊராட்சி இந்திரா நகரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத 2 பொதுக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீா்செறிவூட்டும் திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் சேகரிப்பு... மேலும் பார்க்க

நீா் செறிவூட்டல் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் மழை நீரை குளம், குட்டைகளில் செறிவூட்டல் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் த... மேலும் பார்க்க

சாலையோரத்திலேயே எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

விளைநிலங்களை தவிா்த்து சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும் என பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ... மேலும் பார்க்க

அவிநாசியில் கஞ்சா வழக்கில் ஒருவா் கைது

அவிநாசியில் கஞ்சா கடத்திய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவிநாசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு அவிநாசி போலீஸாா் வாகனச் சோதனை... மேலும் பார்க்க

முதலிபாளையத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் கிராமத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் வருவாய் கோட... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலா்கள் கைது

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலா்கள் கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க