மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட...
பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கக் கோரி பெற்றோா்கள், மாணவா்கள் சாலை மறியல்
உதகை அருகே உள்ள சோலடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேதம் அடைந்துள்ள கட்டடங்களை சீரமைக்கக்கோரி மாணவா்களுடன், பெற்றோா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன
உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட சோலடா, கல்லட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 90-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோலடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளியில் வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதாரமான குடிநீா் வசதி, கழிப்பிட வசதிகள் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி பெற்றோா்களும், மாணவ, மாணவிகளும் கல்லட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா், காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், பள்ளி கட்டடத்தை விரைவில் சீரமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தப் போராட்டம் காரணமாக உதகையில் இருந்து மசினகுடி வழியாக மைசூரு செல்லும் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.