செய்திகள் :

"பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் படிக்கலயா?" - வைரல் வீடியோவுக்கு அன்பில் மகேஸ் விளக்கம்

post image

நேற்று (நவம்பர் 20) இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸிடம், அவரது இரண்டாவது மகன் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்காமல் பிரெஞ்சு மொழி பயில்வதாகப் பேசிய வீடியோ வைரல் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "எனது மகன் 6 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைத்தான் படித்தார். 7ஆம் வகுப்பில் புதிதாக ஒரு மொழியைக் கற்க முயற்சி செய்வதாகப் பிரெஞ்சு மொழியைத் தேர்வு செய்து படித்தார்.

அன்பில் மகேஸ்

அது கடினமாக இருப்பதாகத் தற்போது தமிழ் மொழிக்கு மாறிவிட்டார். சத்யா மேடம் தான் அவரது ஆசிரியர். எதனால் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. திடீரென மைக் நீட்டிக் கேட்டதால் என்ன சொல்வதென்று தெரியாமல் சொல்லிவிட்டான். கவலையே படாதீர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகன் தமிழ் மொழியில்தான் படிக்கிறார்" என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்த்துத்தான் வருகிறோம்.

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தித் தான் வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

மாநில கல்விக் கொள்கை எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, "ஒட்டு மொத்தமாகக் கருத்து வாங்கியிருக்கிறோம். அது சார்ந்தே பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது.

அன்பில் மகேஸ்

அதனை வரக் கூடாது என்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறார்கள். அதனை ஏற்காமல் செயல்படுத்தி வருவது நம் மாநில கல்விக் கொள்கை சார்ந்ததே" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`மகாராஷ்டிரா வெற்றி பாரத தேசத்தின் கருத்து; 2026... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்’ - தமிழிசை உற்சாகம்

மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக முன்னிலையில் இருக்கிறது.மகாராஷ்ராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி 221 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியை த... மேலும் பார்க்க

Maharashtra: ``தேர்தல் முடிவை ஏற்க முடியாது; ஏதோ சதி நடந்திருக்கிறது” - தாக்கரே கட்சி புகார்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டபோது பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டு... மேலும் பார்க்க

Maharashtra: கைகொடுத்த பெண்கள் வாக்கு; ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் பாஜக கூட்டணி - முதல்வர் யார்?

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு கடந்த 20-ம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பிரதானப்படுத்தி பா.ஜ.க தலைம... மேலும் பார்க்க

``இங்கிலாந்து வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" - நெதன்யாகு பிடிவாரண்ட் குறித்து இங்கிலாந்து

கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்துக்கும் - இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரில் இதுவரை காஸாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500-ஐ கடந்துள்ளது... மேலும் பார்க்க

மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம்; எங்கேதான் இருக்கிறது உயிர் பாதுகாப்பு? - சாடும் எதிர்க்கட்சிகள்

அதிகரிக்கும் குற்றங்கள்:தமிழகத்தில் பட்டப்பகலில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒர... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் - ‘டபுள் கேம்’ ஆடுவது தமிழக அரசா, மத்திய அரசா?

புதிய சுரங்கம்!மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை ஒட்டி புதிதாக டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியா... மேலும் பார்க்க