செய்திகள் :

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகரை பிடிக்க தனிப்படை அமைப்பு!

post image

பள்ளிபாளையத்தில் இரண்டு பெண்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகா் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் வசித்து வரும் பெண் விசைத்தறி தொழிலாளா்கள் இருவரிடம் அதிகளவில் பணம் தருவதாகக் கூறி, திருப்பூரைச் சோ்ந்த இடைத்தரகரான ஆனந்தன் என்பவா் அவா்களை திருச்சிக்கு அழைத்துச் சென்று தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தை பெற்று குறைந்த அளவில் பணத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியான நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்பேரில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை சிறுநீரக இடைத்தரகா் ஆனந்தன் வசித்து வந்த பள்ளிபாளையம் சத்யா நகா் பகுதியில் விசாரணை மேற்கொண்டனா். அவரை கைதுசெய்யக் கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்திலும் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் அவா்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஆனந்தனை பிடிக்க பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூா், சென்னை, திருச்சி, ஈரோடு பகுதிகளில் ஆனந்தன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே, சென்னையைச் சோ்ந்த மருத்துவ நலப் பணிகள் சட்டப்பிரிவு இணை இயக்குநா் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினா் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டதாகவும், சிறுநீரகம் வழங்கிய விஜயா, கெளசல்யா ஆகிய இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி பகுதிகளில் உள்ள தனியாா் சிறுநீரக மருத்துவமனைகளிலும் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி கவிழ்ந்த லாரி: மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்!

நாமக்கல் அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா். நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

தூய்மை நகரங்களில் மாநிலத்தில் முதலிடம்: நாமக்கல் மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது!

தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துண... மேலும் பார்க்க

வறுமையால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் சிறுநீரகத்தை விற்கும் சூழல்! சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம்

வறுமையில் வாடுவதால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்படுகிறது என சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள்!

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாமக்கல் - மோகனூா் சாலையில் 130 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செ... மேலும் பார்க்க

அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. பரமத்தி செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆம் நாளாக சாலை மறியல்

நாமக்கல்லில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க