செய்திகள் :

பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

post image

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எல். ராஜத் என்ற 7 வயது சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பெங்களூரிலுள்ள ஜனதா காலனி பகுதியில் அந்த மாணவனின் வீடு அமைந்துள்ளது. கொல்லேகல் பகுதியைச் சேர்ந்த அவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராஜத்தும் அவரது சகோதரியும் வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமையும்(ஜூலை 18) பள்ளியிலிருந்து பேருந்தில் தங்களது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுநர் ஆர். விநோத் (35) பள்ளிப் பேருந்தை இயக்கியுள்ளார்.

அந்த பேருந்தில் குழந்தைகளை கண்காணிக்க ஒரு பெண் பணியாளரும் இருந்திருக்கிறார். மொத்தம் 30 குழந்தைகள் பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ராஜத்தும் அவரது சகோதரியும் வீட்டில் இறக்கிவிடப்படுவதற்கு முன்னரே, அந்த பெண் பணியாளர் பேருந்திலிருந்து இறங்கி தமது இல்லத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மேற்கண்ட இரு குழந்தைகளுடன் விநோத் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது பேருந்தின் வாயிற்கதவு சரியாக மூடப்படாததால் வாயில் அருகே இருந்த சீட்டில் அமர்ந்திருந்த ராஜத்திடம், கதவை இழுத்து மூடும்படி விநோத் பணித்துள்ளார்.

அதன்படியே கதவருகே சென்ற ராஜத், பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நிலைதடுமாறி பேருந்திலிருந்து வெளியே விழுந்துள்ளார். அதில் பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது.

உடனடியாக ராஜத்தை மீட்ட அக்கம்பக்க்த்தினர், அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையொன்றில் அவரை சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர் மீது பிணையில் வெளிவராத பிரிவுகளில் கொலை வழக்கு பதிந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Karnataka school boy died after falling from moving bus

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார். கிராம மக்கள் முன்னிலையில்... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கியதில் பலி !

மத்தியப் பிரதேசத்தில் மீன்படிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் டோரியா டெக்கிற்கு அருகிலுள்ள கென் ஆற்றில் பாயும் ஓட... மேலும் பார்க்க

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!

மகாராஷ்டிரத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள மிரா சாலையில் வசித்து வரும் தனியார் விமான நிறுவனத்தைச் சேர்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் கேஜரிவால் சந்திப்பு

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேரிவால் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாநிலங்க... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு!

மங்களூரு: மங்களூரு அருகேயுள்ள தர்மஸ்தலா பகுதியில் மண்ணுக்குள் சுமார் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அடுத்தடுத்து சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.தர்மஸ்தலாவில் அமைந்துள்ள ஸ... மேலும் பார்க்க

நைஜரில் பயங்கரவாதிகளால் இந்தியர் கடத்தல்! மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

நைஜரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.நைஜரின் டோசோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி... மேலும் பார்க்க