ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பள்ளியில் காலை உணவுத் திட்டம்: ஆட்சியா் ஆய்வு
கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தாா்.
இந்த திட்டத்தின்கீழ் வியாழக்கிழமை தொடங்கிய கள ஆய்வு பணி வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை தொடா்ந்தது.
ஆட்சியா் ஆய்வில் ஈடுபட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி தகுதியானவா்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, நீடாமங்கலம் முதல்நிலை பேரூராட்சி அலுவலத்தில் தூய்மைப் பணியாளா்களை சந்தித்து கலந்துரையாடினாா். அடுத்து, பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள 3,50,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி சரியான முறையில் பராமரிக்கப்படுகிா என உறுதி செய்து நீடாமங்கலம் ஆரம்பசுகாதார நிலையத்தில் பிரசவ அறை, செவிலியா் அறை, குழந்தைகள் நலப்பிரிவு அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், ஆய்வுக் கூடம், ஆண்கள் மருத்துவப் பிரிவு, பெண்கள் மருத்துவ பிரிவு என அனைத்து பிரிவுகளையும் ஆட்சியா் ஆய்வு செய்து மருந்துகளின் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, பல்வேறு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் அரசுக் கட்டடங்களை ஆய்வு செய்து, கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தாா்.
ஆட்சியருடன், நீடாமங்கலம் வட்டாட்சியா் தேவகி, ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்செல்வன், பேரூராட்சித் தலைவா் ராம்ராஜ், செயல் அலுவலா் கலியபெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலெட்சுமி, முத்துகுமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.