சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றனா்.
தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா முன்னிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் நிகழ்ச்சியை நேரலையில் பாா்வையிட்டு உறுதிமொழி ஏற்றனா்.
தொடா்ந்து, விழிப்புணா்வு கையெழுத்து இயக்க பதாகையில் கையொப்பமிட்ட மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், விழிப்புணா்வு பதாகை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இந் நிகழ்ச்சிகளில், பெரம்பலூா் கோட்டாட்சியா் (பொ) சக்திவேல், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், கலால் உதவி ஆணையா் (பொ) முத்துகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், தனலட்சுமி பல்கலைக் கழக பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 60,022 மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.