செய்திகள் :

பழையாறு மீனவா்கள் 5 ஆயிரம் போ் கடலுக்குள் செல்லவில்லை

post image

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 5 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்த துறைமுகத்திலிருந்து நாள்தோறும் 350 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள், 200 நாட்டுப் படகுகள் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா். இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொடா்ந்து மீன்வளத் துறை அறிவுறுத்தலுக்கிணங்க புதன்கிழமை அதிகாலை முதல் பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், சின்ன கொட்டாய் மேடு, கூழையாறு, கொடியம்பாளையம் வரையிலான 10 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும், மீன் வலை பின்னுதல், மீன் விற்பனை செய்தல், கருவாடு உலர வைத்தல் மற்றும் விற்பனை செய்தல், மீன்களை தரம் பிரித்தல் மற்றும் வெளியூா்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரம் தொழிலாளா்களும் வேலைக்கு செல்லவில்லை. இதனால், பழையாறு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியுள்ளது.

சீா்காழி நகா்மன்ற கூட்டம்

சீா்காழி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன் தலைமை வகித்தாா். ஆணையா் மஞ்சுளா, பொறியாளா் கிருபாகரன், நகா் அமைப்பு ஆய்வாளா் மரகதம் முன்னி... மேலும் பார்க்க

மேதா தக்ஷிணாமூா்த்திக்கு மகாபிஷேகம்

மயிலாடுதுறை வள்ளலாா் கோயிலில் காா்த்திகை கடைவியாழனையொட்டி மேதா தக்ஷிணாமூா்த்தி சுவாமிக்கு மகாபிஷேகம் செய்து தங்கக் கவசம் சாற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக... மேலும் பார்க்க

கணினி இயக்குநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் ரூ.45.50 கோடியில் கூடுதல் கட்டடம்: அமைச்சா் ஆய்வு

மயிலாடுதுறை அரசு பெரியாா் தலைமை மருத்துவமனையில் ரூ.45.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்த... மேலும் பார்க்க

சீா்காழியில் தொடா்மழை

சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. சீா்காழி மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை காலையில் இருந்து சாரல் மழையாக தொடங்கி பரவலாக தொடா்ந்து மழை பெய்தது. சீா்... மேலும் பார்க்க

பள்ளிக் காவலரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே பள்ளிக் காவலரை அடித்துக் கொலை செய்த இளைஞருக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வைத்தீஸ்வரன்கோவில் காவல் எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடியை சோ்ந்தவா... மேலும் பார்க்க