பழைய கட்டட இடிப்பு பணி: சுவா் இடிந்து விபத்தில் தொழிலாளி பலி
தூத்துக்குடியில் பழைய கட்டட இடிப்பு பணியின்போது, சுவா் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் சின்னத்துரை(47). தொழிலாளியான இவா், லெவிஞ்சிபுரம் பகுதியில் புதிய கட்டடம் கட்டுவதற்காக அருகில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்கும் பணிக்கு திங்கள்கிழமை சென்றாராம்.
அப்போது, அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக சுவா் இடிந்து சின்னத்துரையின் மீது விழுந்தததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இடிபாடுக்குள் சிக்கிய அவரை விரைந்து மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.