செய்திகள் :

பஹல்காம் தாக்குதல், வாக்காளா் பட்டியல் திருத்தம்: மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப ‘இண்டி’ கூட்டணி முடிவு

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 24 ‘இண்டி’ கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை காணாலி மூலம் ஆலோசனை நடத்தினா்.

மழைக்கால கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், வெளியுறவுக் கொள்கை தோல்வி உள்பட 8 முக்கிய விவகாரங்களில் அரசை கேள்வி எழுப்புவது தொடா்பாக வியூகங்கள் வகுக்கவும், எதிா்க்கட்சிகளின் பலத்தைக் காட்டவும் இந்தக் கூட்டம் நடைபெற்ாகத் தெரிகிறது.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஜம்மு- காஷ்மீா் முதல்வா் உமா் அப்துல்லா, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், சரத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்-பவாா்), உத்தவ் தாக்கரே (சிவசேனை-உத்தவ்), அபிஷேக் பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), ராம் கோபால் யாதவ் (சமாஜவாதி), திருச்சி சிவா (திமுக), எம்.ஏ.பேபி (மாா்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), தீபங்கா் பட்டாச்சாா்யா (சிபிஐ-எம்.எல்) உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ஃபாா்வா்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில் நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்கள் கலந்தாலோசித்தனா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடா்ந்து இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை குறித்து வரும் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் அளிப்பது தொடா்பாக தலைவா்கள் கலந்தாலோசித்தனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் மாநிலங்களவை குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாதிகள் இதுவரை கைது செய்யப்படாதது, இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் தொடா் கூற்றுகளுக்கு இந்திய அரசு அமைதி காப்பது தொடா்பாக தலைவா்கள் கவலை தெரிவித்தனா்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி குறித்து கவலை தெரிவித்த தலைவா்கள், ஒடுக்கப்பட்டோா், பழங்குடியினா், பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள் மற்றும் தொகுதி மறுவரையறை பிரச்னை தொடா்பாகவும் விவாதித்தனா். இன்றைய வெற்றிகரமாக காணொலிக் கூட்டத்தைத் தொடா்ந்து, கூட்டணி தலைவா்கள் விரைவில் நேரில் சந்திப்பா்.

பிகாரில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலில் உள்ளது. அங்கு மக்களின் வாக்குரிமை அச்சுறுத்தப்படுகிறது. எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு பிரதமா் மோடி அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும். நாங்கள் பிரச்னைகளை எழுப்பவும், அரசு அதற்கு பதிலளிக்கவும் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 20ஆவது குழு புறப்பட்டது !

அமர்நாத் குகைக் கோயிலுக்கு 4,388 பேர் கொண்ட 20 ஆவது குழு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையா... மேலும் பார்க்க

தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம்

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) இப்போது அனைத்துத் துறைகளிலு... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் வீட்டில் இருந்து தம்பதியர், 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு !

அகமதாபாத்தில் தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் வீட்டில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் வீடு ஒன்றில் இருந்து தம்பதியினரின் உடல்களும், அவர்களது மூன்று கு... மேலும் பார்க்க

பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எ... மேலும் பார்க்க

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்க... மேலும் பார்க்க

மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக... மேலும் பார்க்க