காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்
பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. குரூப்-பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறிவிட்ட நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கான போட்டியில் இருக்கின்றன.
இதையும் படிக்க: ஆஸி. கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி! நடுவர் பதவியை ராஜிநாமா செய்தார் டேவிட் பூன்!
இந்த நிலையில், அரையிறுதியில் இருந்து வெளியேறிவிட்ட நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதும் இந்தத் தொடரின் 9-வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இரு அணிகளும் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டாலும், 3-வது இடத்தைப் பிடிப்பதில் போட்டி நிலவியது.
மைதானத்தைச் சுற்றிலும் மேகங்கள் சூழ்ந்து இருந்ததாலும் இந்தப் போட்டி 88 சதவீதம் மழையால் பாதிக்கப்பட்டதாலும் டாஸ் கூட போடாமல் போட்டி ரத்துசெய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து அளிக்கப்பட்டது. ஒரு வெற்றிகூட இல்லாமல் வங்கதேசம் மூன்றாவது இடத்தையும், பாகிஸ்தான் அண் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.
இதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!