செய்திகள் :

பாகிஸ்தான் வான்வழிப் பாதைகள் 2 நாள்களுக்கு மூடல்!

post image

பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வான்வழிப் பாதைகள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையம், அந்நாட்டின், சில தேர்ந்தெடுக்கப்பட்ட வான்வழிப் பாதைகள் ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூடப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியான அறிக்கையில், காராச்சி மற்றும் லாஹுர் விமானத் தகவல்கள் செயல்பாட்டுக் காரணங்களினால், சில தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களின் தரைமட்டத்தில் இருந்து வானில் சில தூரம் வரையில் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், அந்த வான்வழிப் பாதைகள் வழியாக எந்தவொரு ராணுவம் மற்றும் பயணிகள் விமானம் ஆகியவை பயணிக்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் என்னவென்று அந்நாட்டு அதிகாரிகள் விவரமாகக் கூறவில்லை. மூடப்படும் என அறிவிக்கப்பட்ட வான்வழிப் பாதைகளுக்கு பதிலாக மாற்றுப்பாதைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால்: எலான் மஸ்க்

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கா... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்த... மேலும் பார்க்க

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹா லாங் விரிகுடாவில் 50 பேருடன் சனிக்கிழமை பிற்பகல் சென்ற சுற்றுலாப் படகு திடீரென இடியுடன் கூடிய ... மேலும் பார்க்க