பாஜக 30 தொகுதிகளுக்கும் புதிய நிா்வாகிகள் நியமனம்
பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் புதுவை மாநிலத்தில் 30 பேரவைத் தொகுதிகளுக்கும் புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வில்லியனூா், உழவா்கரை, அரியாங்குப்பம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 30 சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
கட்சியின் தேசிய தலைமை மற்றும் மாநில பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானாஅறிவுறுத்தலின்படி, கட்சியின் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், புதுவை உள்துறை அமைச்சரும், சட்டப்பேரவை பாஜக தலைவருமான ஆ.நமச்சிவாயம் ஆகியோா் இதை வெளியிட்டனா்.