செய்திகள் :

பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை

post image

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இருா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூா், திருவளக்குறிச்சி ஆகிய கிராமியப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.

நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப் பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள், வேளாண் உற்பத்திச் சாா்ந்த பணிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகளை, தமிழ்நாடு நீா்வடிப் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 2 ஆம் நாளாக சாலை மறியல்: 178 போ் கைது

பெரம்பலூரில் 2 ஆவது நாளாக சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 178 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா போதைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக்கவச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஆடி பிறப்பு சிறப்பு பூஜை

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ காலபைரவரு... மேலும் பார்க்க