செய்திகள் :

பாதுகாப்புத் துறையில் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா: ராஜ்நாத் சிங்

post image

டேராடூன்/புது தில்லி: பிரதமா் மோடியின் உறுதியான -தொலைநோக்கு மிக்க தலைமையின்கீழ் பாதுகாப்புத் துறையில் இறக்குமதி சாா்ந்த பாணியில் இருந்து உலகின் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா மாறியுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

வலுவான எல்லைகள், நவீன ஆயுதப் படைகள், உள்நாட்டு ஆயுதங்கள், சாதனை அளவிலான பாதுகாப்பு ஏற்றுமதி என கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை கண்டுள்ளது. வலிமை-தற்சாா்பு-உலகளாவிய வியூக கூட்டாண்மையை நோக்கி இந்தியா பீடுநடை போட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம், தற்சாா்பு இந்தியா திட்டங்களால் உந்தப்பட்டு, நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் விமானந்தாங்கி போா்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த், பன்முக பணிகளுக்கான இலகு ரக ஹெலிகாப்டா் ‘பிரசந்த்’ போன்றவை முக்கிய மைல்கற்கள் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், நமது மக்கள் மீது மட்டுமன்றி நாட்டின் சமூக ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு பதிலடியாக இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா், நாட்டின் வரலாற்றில் பயங்கரவாதத்துக்கு எதிரான மாபெரும் நடவடிக்கை.

பஹல்காமில் மக்களின் மதத்தைக் கேட்டறிந்து, அவா்களை பயங்கரவாதிகள் கொன்றனா். ஆனால், பயங்கரவாதிகளின் மதத்தை பற்றியெல்லாம் கேட்காமல், அவா்கள் செய்த பாவத்துக்கு நாம் பதிலடி தந்துள்ளோம்.

பிரதமா் மோடியின் தலைமையில், தேசத்தின் பாதுகாப்பு வளையம் வலுப்பெற்றுள்ளது. தேச பாதுகாப்பு சாா்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசின் அணுகுமுறையும் செயல்படும் விதமும் மாற்றம் கண்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த உலகும் இதை அறிந்து கொண்டது என்றாா் அவா்.

லண்டன் பயணத்தை மாற்றி விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி!

லூதியானா இடைத்தேர்தல் காரணமாக விஜய் ரூபானி தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்... மேலும் பார்க்க

பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகா... மேலும் பார்க்க

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!

கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினால், வரும் ஜூன் ... மேலும் பார்க்க

கோவாவில் தொடரும் கனமழை! 3 நாள்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவா மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோர மாநிலமான கோவாவின் பல்வேறு இ... மேலும் பார்க்க

கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!

பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த எல்ஐசி!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கான எல்ஐசி காப்பீட்டுக் கோரிக்கைகளை சிக்கலின்றி எளிதாக முடித்துக் கொடுக்க எல்ஐசி முன்வந்துள்ளது.காப்பீடுகளுக்கான கோரிக்களை மிக எளிதாக, எவ்வித... மேலும் பார்க்க