பாப்பாநாட்டில் ஜூலை 22-ல் மின் தடை
கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பயம் மற்றும் கிளாமங்கலம் மின் பாதைகளுக்கு மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் (பொ) எஸ்.சங்கா் குமாா் தெரிவித்துள்ளாா்.
மேலும், பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 94987-94987 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.