வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
பாலவிளை கோயிலில் ஒரே வாரத்தில் இரு உண்டில்கள் திருட்டு
கருங்கல் அருகே உள்ள பாலவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரு உண்டியல்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருங்கல் அருகே உள்ள பாலவிளையில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் உள்ளன. இங்கு, நாள்தோறும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த வாரம் இக்கோயிலில் மா்மநபா்கள் புகுந்துஅங்கிருந்த உண்டியலை திருடிச் சென்றனா்.
புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் மா்ம நபா்கள் அங்கிருந்த மற்றொரு உண்டியலை திருடிச் சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.