மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல், தடை செய்தல், தீா்வு காணுதல் சட்டம்-2013 குறித்த விழிப்புணா்வு முகாமுக்கு முதல்வா் மு.ரோகிணி தேவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வேலூா் மாவட்ட சமூக நலன், மகளிா் அதிகார மையம், நிதி கல்வியறிவு நிபுணா் ஆா்.தினேஷ்குமாா் பங்கேற்று அரசு பொது, தனியாா் நிறுவனங்களில் 10 நபா்களுக்கு மேல் பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த செயல்களை விரிவாக எடுத்துரைத்தாா்.
அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், துணை முதல்வா் (பொ) பால்கா், குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ், துறை தலைவா்கள் மோகன்காந்தி, குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.