பால் வியாபாரி கொலை : 5 போ் கைது
கம்பத்தில் பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). இவரை கடந்த புதன்கிழமை இரவு விவேகானந்தா் தெரு பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியது.
இது குறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வந்தனா். இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த விஜய் (24), தென்னவன் (26), ரவிதா்மா (28), புதுப்பட்டியை சோ்ந்த பாலா (23), ஜனாா்த்தனன் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நடந்ததாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.