மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
பாளை. அருகே பசு மாடு திருட்டு
பாளையங்கோட்டை அருகே பசுமாடு திருடு போனது தொடா்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாளையங்கோட்டை கேடிசி நகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா் வீட்டில் மாடுகளை வளா்த்து வந்துள்ளாா். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள நிலத்தில் கடந்த 2 ஆம் தேதி மேய்ச்சலுக்கு விட்டிருந்த பசுமாட்டை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் அதை கண்டுபிடக்க முடியாத நிலையில் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.