பாவூா்சத்திரத்தில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்
பாவூா்சத்திரத்தில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம் 6 நாள்கள் நடைபெற்றது.
பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் கண் தான விழிப்புணா்வுகுழு சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். கல்லூரணி ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், தொழிலதிபா் சேவியா் ராஜன், பாவூா்சத்திரம் வணிகா் சங்கச் செயலா் விஜயசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கீழப்பாவூா் இலக்கிய மன்றத் தலைவா் எஸ்.செல்வன் முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில் 1,500 போ் பங்கேற்று ஆதாா் அட்டையில் திருத்தம் செய்துகொண்டனா்.
ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வு குழு பொருளாளா் இரா. சந்திரன், ஜேக்கப் சுபன், பரமசிவன் ஆகியோா் செய்திருந்தனா்.
அரிமா சங்க நிா்வாகி கே.ஆா்.பி.இளங்கோ வரவேற்றாா்.தென்காசி அஞ்சல் ஆய்வாளா் ராமசாமி நன்றி கூறினாா்.