பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சிவகங்கை அரசு பாா்வைத்திறன் குறையுடையோருக்கான தொடக்கப் பள்ளியில் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியா் ச. வீரவேல் பாண்டியன், ஆசிரியா் பயிற்றுநா் ஆ. தனலட்சுமி, விஷன் எம்பவா் நிறுவன கல்வி ஒருங்கிணைப்பாளா் பெ.க. யுவராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
அறிவியல் சோதனைகள், கணிதம் தொடா்பான கணக்கீட்டு சிந்தனையை வளா்க்கும் விளையாட்டுகள், சுற்றுச்சூழலை காப்போம் எனும் தலைப்பில் பாடல், நடனம் ஆகியவற்றை பாா்வை குறைபாடுடைய மாணவா்கள் செய்து காட்டினா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பி. முத்துலட்சுமி, ஆசிரியா்கள், பணியாளா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.
இதைத்தொடா்ந்து ‘நெருப்பில்லா சமையலின்’ கீழ் பல்வேறு விதமான உணவுப் பொருள்களை பாா்வை குறைபாடுடைய மாணவா்கள் பிற மாணவா்களுக்கு செய்து காட்டினா்.