செய்திகள் :

பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை: ``எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக..." - ஸ்டாலின் கண்டனம்!

post image

கேரள முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த பொலிட்பீரோ உறுப்பினருமான பினராயி விஜயனின் வீடுகளில் அமலாக்கத்துறை இன்று (மே 27, 2026) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிம மணல் நிறுவனம் (CMRL) மற்றும் பினராயி விஜயனின் மகள் டி. வீணாவின் 'எக்ஸாலஜிக்' (Exalogic) நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான நிதிப் பரிவர்த்தனை வழக்கில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கடுமையான அரசியல் போராக மாறியுள்ளது.

திமுக - ஸ்டாலின்
திமுக - ஸ்டாலின்

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், ``பா.ஜ.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து நடத்தும் ஒரு திட்டமிட்ட தாக்குதல். மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அமலாக்கத்துறையைக் கண்டு சிபிஐ(எம்) கட்சியோ அல்லது பினராயி விஜயனோ ஒருபோதும் அஞ்சமாட்டார்கள், பின்வாங்கவும் மாட்டார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தியது. அதைப் பயன்படுத்தியே பா.ஜ.க ஒரு முதலமைச்சரை சிறையில் அடைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது. டெல்லியில் பா.ஜ.க-வுக்கு காங்கிரஸ் எப்படி உதவியதோ, அதேபோல் தான் கேரளாவிலும் செய்கிறது" எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``முன்னாள் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவதை இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை தீவிர கவலையோடு வெளிப்படுத்துகின்றன. அதே வேளையில், "பினராயி விஜயனை இன்னும் ஏன் பா.ஜ.க குறிவைக்கவில்லை?" என்று தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி, பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சில காங்கிரஸ் தலைவர்களின் வெற்று வாதங்களையும் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க