107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
பிரதமரின் வளர்ச்சிதான் வெற்றிக்குக் காரணம்: மத்திய அமைச்சர்
மகாயுதி கூட்டணியின் வெற்றியை நெருங்கியுள்ளதாக மத்திய அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சியில் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 219 தொகுதிகளிலும், பாஜக 125 தொகுதிகளிலும், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 55 தொகுதிகளிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நிலை உருவாகியுள்ளது.
எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி 56 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனை 19 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கூறுகையில்,
மகாயுதி கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் வளர்ச்சித் திட்டங்கள். குறிப்பாக லட்கி பஹின் யோஜனா கூட்டணி வெற்றி வித்தியாதத்தை அதிகரித்து, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் 225 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வெற்றிக்குக் காரணம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மகாராஷ்டிர அரசு எடுத்த முடிவுகள்தான். முடிவு நிச்சயம் புரட்சிகரமானது என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றியை நெருங்கிவரும் நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கூட்டணி இணைந்து தேர்தலில் போட்டியிட்டது போல், இறுதி முடிவுகள் வெளியானதும் முதல்வரின் முகத்தைக் கூட்டாக முடிவு செய்வோம் என்று கூறினார்.
இறுதி முடிவுக்கு பின்னர், நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டது போல் மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து யார் முதல்வர் என்பது குறித்து முடிவெடுப்போம் என்று முதல்வர் ஷிண்டே கூறினார்.
இதற்கிடையில், தாணேவில் உள்ள ஷிண்டேவின் இல்லத்தில் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கிவிட்டன. சிவசேனா எம்.பி.யும், ஷிண்டேவின் மகனுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவும், சக கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.