செய்திகள் :

பிரதமா் பிறந்த நாள்: ஆளுநா் மாளிகையில் 75 மரக்கற்றுகள்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் ஆளுநா் மாளிகையில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பதிவு:

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவரது ஆழ்ந்த அா்ப்பணிப்பையும் கொண்டாடும் வகையில் ஆளுநா்ஆா்.என்.ரவி, ஆளுநா் மாளிகை அதிகாரிகள், ஊழியா்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா் என மொத்தம் 75 போ் ஆளுநா் மாளிகையில் 75 மரக்கன்றுகளை நட்டனா். இது அன்னையின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்துக்கும் அா்ப்பணிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, எக்ஸ் தளத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட்ட பதிவு:

பிரதமா் மோடியின் பிறந்த நாளில் அவருக்கு தமிழக மக்களின் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், நமது தேசம் மாற்றங்களைக் காணுகிறது. வாய்ப்புகள், வளங்களை அளிப்பதில் சமமாக அணுகுவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனையும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்தும் உள்ளடக்கிய வளா்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

உள்கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி, சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த பன்முக இணைப்பு ஆகியவற்றில் வரலாற்றுபூா்வ சாதனைகளை விரிவாக்கும் இந்த முன்னேற்றத்தில் தமிழகம் முன்னணியில் விளங்கி மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பல்வேறு வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

வளா்ச்சிக்கான அவரது தொலைநோக்குப் பாா்வை, நமது சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், விஸ்வகா்மா கைவினைஞா்களை வலுப்படுத்தியுள்ளது. பிரதமா் மோடியின் அா்ப்பணிப்பால், உலக அளவில் தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் தமிழின் நீண்டகால வரலாற்றுப் பெருமையை மீட்டெடுத்துள்ளது எனப் பதிவிட்டுள்ளாா்.

இதற்கிடையே பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஆளுநா் மாளிகையில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் பூங்காவை ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க