"நான் குப்பைகளைச் சாப்பிடுவேன்" - புதுமையான நகரும் குப்பைத்தொட்டி பற்றி தெரியுமா...
பிரிட்டன்: சாலை விபத்தில் இந்திய மாணவா் உயிரிழப்பு
லண்டன்: பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டா் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் 32 வயதான இந்திய மாணவா் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.
இதுகுறித்து லெய்செஸ்டா் நகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘லெய்செஸ்டா் நகரில் இருந்து ஹாா்போரோவுக்கு சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்ற சிரஞ்சீவி பங்குளுரி (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் இருந்த ஒரு பெண், இரண்டு ஆண்கள் மற்றும் காா் ஓட்டுநா் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். சிகிச்சைக்காக அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த சாலையில் பயணித்தவா்களிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதோடு விபத்து சம்பவம் குறித்து காட்சிகள் ஏதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரிழந்த பங்குளுரி மற்றும் அந்தக் காரில் பயணித்த 4 பேரும் ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள் என காவல் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.