வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு: 2 ஆலைகளுக்கு ‘சீல்’
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்த வில்லியனூா், ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற 15 வகையான பொருள்களுக்கு புதுவை அரசு தடை விதித்துள்ளது.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் வில்லியனூா் வட்டாட்சியா் சேகா் தலைமையில் வில்லியனூா், ராமநாதபுரம் பகுதியில் உள்ள 2 தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதன்படி, தடை செய்த பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பது உறுதியான நிலையில், 2 தொழிற்சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்த விவரங்கள் சுற்றுச்சூழல் துறை செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.