செய்திகள் :

பீகார் தேர்தல்: "ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு ரூ.30,000 கொடுப்போம்" - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

post image

பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அப்பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித் ஷா உட்பட பா.ஜ.க தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வரும் என்றும் காட்டாட்சி வரும் என்றும் கூறி பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பெண்கள் உதவித்தொகை என்று கூறி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு 'பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது நிதீஷ் குமார் அரசு.

இதற்குப் போட்டியாக தேஜஸ்வி யாதவும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு மகர சங்கராந்தியான ஜனவரி 14ம் தேதி 'மாய் பெஹின் யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் வழங்குவோம். அதோடு விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும்'' என்று அறிவித்தார்.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு நிதியுதவியை அறிவிப்பதில் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14ம் தேதி நடைபெறுகிறது.

ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; அபராதம் ரூ.21 லட்சம்! என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரி... மேலும் பார்க்க

`பிக் பாஸ்' பார்த்துக்கொண்டே ஹைவேஸில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர், பணிநீக்கம் - பின்னணி என்ன?

மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே தனது மொபைல் போனில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கட... மேலும் பார்க்க

’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்

'கோவா மைல்ஸ்' என்ற செயலி மூலம் கார் புக் செய்த ஜெர்மன் சுற்றுலா ஜோடியை உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய... மேலும் பார்க்க

``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி

பெங்களூரு விமான நிலையத்தில் நமாஸ் செய்த காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹஜ் செல்லும் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் ஹஜ் செல்வதற்கு முன்பு திடீரென 2ஆம் நம்ப... மேலும் பார்க்க

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு : எப்படி நாட்டினுள் வந்தது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க