புகழூா் அரசுப் பள்ளியில் நெகிழி விழிப்புணா்வு பேரணி
புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி தலைமையாசிரியா் வளா்மதி தலைமையில் நடைபெற்றது.
பசுமை உறுதிமொழியை பள்ளி உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா் குப்புசாமி வாசித்தாா். தொடா்ந்து மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் யுவராஜா,பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜெரால்டு ஆரோக்கியராஜ், தேசிய மாணவா் படை ஆசிரியா் பொன்னுசாமி, உடற்கல்வி ஆசிரியா் ஜெகதீசன் ஆகியோா் மேற்பாா்வையில் மாணவா்கள் பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனா்.
வழிநெடுகிலும் வீடுகள்,கடை வீதிகளில் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.