செய்திகள் :

புணே: நவம்பர் மாதத்தில் சொத்துக்களின் பதிவு 11% வீழ்ச்சி!

post image

புதுதில்லி: புணேவில் சொத்துகளின் பதிவு விகிதம் கடந்த நவம்பரில், 11% குறைந்து, 13 ஆயிரத்து 371 ஆக உள்ளது என்று நைட் பிராங்க் இந்தியா தெரிவித்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியா இன்று வெளியிட்ட அறிக்கையில், புனேவில் 2024 நவம்பரில் 13,371 சொத்துக்கள் பதிவாகி மாநில கருவூலத்திற்கு ரூ.475 கோடி வருவாய் ஈட்டியது. அதே வேளையில் கடந்த ஆண்டு நவம்பரில் 14,988 சொத்துக்கள் பதிவானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அக்டோபரில் 20,894 சொத்துக்களுடன் ஒப்பிடும்போது, நவம்பரில் சொத்துக்களின் பதிவு 36% குறைந்துள்ளது.

நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷிஷிர் பைஜால் கூறுகையில், புனேவின் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து நிலையான பதிவுகளை வெளிப்படுத்தி வருகிறது என்றார்.

பொதுமக்களிடையே வளர்ந்து வரும் விருப்பங்கள் மற்றும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப, புனேவின் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து நிலையான பதிவுகளை எதிர்கொண்டு வருகிறது என்றார் நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஷிஷிர் பைஜால்.

இந்த தரவுகள் குறித்து கருத்து தெரிவித்த புனேவைச் சேர்ந்த கெரா டெவலப்மென்ட்ஸ் நிர்வாக இயக்குநரான ரோஹித் கெரா, நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பதிவுகள், பொதுவாக செப்டம்பர் மாதத்தில் செய்யப்பட்ட விற்பனையே. தற்போது, அதிகரித்து வரும் வீடுகளின் விலையும் மற்றும் அளவு அகியவற்றால், விற்பனையில் ஒரு சிறிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த போக்கு சில மாதங்களில் சரியாகி விடும் என்றார்.

இன்ஃப்ராமந்த்ரா இயக்குநரும் இணை நிறுவனருமான கார்வித் திவாரி கூறுகையில், நவம்பரில் புனேவில் சொத்து பதிவு வீழ்ச்சியானது சந்தையில் எந்தவொரு பலவீனத்தின் அறிகுறி அல்ல. அதே வேளையில், கடந்த ஆண்டு, இந்தியாவில் பெரும்பாம்மையான நகரங்களில் சொத்துக்கள் வரலாறு காணாத அளவு விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையை செலுத்திய ஸ்பைஸ் ஜெட்!

புதுதில்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையான ரூ.1,60.07 கோடியை செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.பல சாவல்கள எதிர்கொண... மேலும் பார்க்க

சரிந்து மீண்ட பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 13) பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில் பின்னர் மீண்டு, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை81,212.45 என்ற புள்ளிக... மேலும் பார்க்க

பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது!!

வாரத்தின் கடைசி நாளான இன்று(டிச. 13) பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை81,212.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 10.46 மணியளவில்,... மேலும் பார்க்க

நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

புது தில்லி: கச்சா சூரியகாந்தி, சோயாபீன் எண்ணெய் ஆகியவை அதிக அளவில் இறக்குதியானதால் கடந்த நவம்பரில் இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 38.5 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய எண்... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு

இந்தியாவிலிருந்து ரூ.8,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து ந... மேலும் பார்க்க

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் இறக்குமதி செய்ய இனி அனுமதி பெற வேண்டும்!

புதுதில்லி: மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள், இனி அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில், அதற்கான விண்ணப்பங்கள் டிச... மேலும் பார்க்க