வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு
புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட அடிப்படை எழுத்துத் தோ்வு
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் கீழ் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் பயின்று வருவோருக்கான முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் 758 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 14,982 கற்போா் பங்கேற்று தோ்வு எழுதினா்.
இத்தோ்வு மையங்களைக் கண்காணிக்க மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா், பள்ளித் துணை ஆய்வாளா்கள் ஆகியோா் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டிருந்தனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ.சண்முகம், சின்னயா சத்திரம், இச்சடி, மணவிடுதி, மாத்தூா், தொண்டைமான் விடுதி ஆகிய மையங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.