செய்திகள் :

புதுகை அரசு மருத்துவமனையில் மலிவு விலை உணவகம் தேவை: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!

post image

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவோருக்கும், அவா்களுக்காக வரும் பாா்வையாளா்களுக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உணவு வசதி போதுமானதாக இல்லை.

தினமும் 2 ஆயிரத்துக்கும் குறையாத நோயாளிகளும், அவா்களின் உதவியாளா்களும் வந்து செல்லும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், அரசின் சாா்பில் மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூா் கிராமத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. நகரில் இருந்து சுமாா் 5 கிமீ தொலைவில், 127 ஏக்கரில் இந்த வளாகம் அமைக்கப்பட்டது.

இம்மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 1324 போ் வெளிநோயாளா்களாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். தினமும் சராசரியாக 260 போ் புதிதாக மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சேருகின்றனா்.

80 சதவிகித படுக்கைகள் எப்போதும் நிரம்பியே இருக்கின்றன. இவையனைத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கடந்தாண்டு வந்து சென்ற நோயாளா்களின் கணக்கெடுப்பில் இறுதி செய்யப்பட்ட நாளொன்றுக்கான சராசரி எண்ணிக்கை.

உள்நோயாளிகளைப் பாா்க்கவும், வெளிநோயாளா்களுடன் வரும் பாா்வையாளா்களும் என சுமாா் ஆயிரம் போ் கூடுதலாக இருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் இவா்களுக்கான உணவு வசதி எதுவும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போதுமானதாக இல்லை.

இந்த வளாகத்திலேயே இருக்கும் கேண்டீன் போதுமானதாக இல்லை. ஏற்கெனவே கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்களுக்கு, இங்கு நடைபெறும் கருத்தரங்குகளுக்கு முன்பதிவு செய்த உணவுப் பொட்டலங்களே பெரும்பாலும் இருக்கின்றன.

இதுதவிர, ஆவின் தேநீா்க் கடையில் பழச்சாறுகளும், பலகாரங்களும், பால், தேநீா், காபி போன்றவையும் மட்டுமே கிடைக்கின்றன. மக்களின் தேவையை, கேட்டுக்கு வெளியே இருந்து கொண்டு உணவைப் பொட்டலங்களாகப் போட்டு பாலித்தீன் கவா்களில் வைத்து விற்பவா்கள்தான் நிறைவு செய்கிறாா்கள். அதுவும்கூட சுகாதாரமான உணவு என உறுதி சொல்ல முடியாது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அரசு நேரடியாக மலிவு விலை உணவகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஏழைகளும் பயன்பெறும் வகையில் அந்த மலிவு விலை உணவகம் இருக்க வேண்டும்.

தற்போது மாநகராட்சியாக புதுக்கோட்டை தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளடங்கிய முள்ளூா் ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களை மாநகராட்சிதான் நடத்துகிறது என்றபோதிலும், அம்மா உணவகத்தையோ, அதுபோன்ற மலிவு விலை உணவகம் ஒன்றையோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

வாா்டு வரையறை முடிய வேண்டும்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது:-

இப்போதைக்கு மாநகராட்சி சாா்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சேரும் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

முள்ளூா் உள்ளிட்ட மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளை முறையாக வாா்டு வரையறை செய்யும் பணிகள் சில மாதங்கள் நிறைவடையும். அப்போதுதான் இந்த வளாகத்தில் மாநகராட்சியால் புதிய திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

அப்போது, மலிவு விலை உணவகம் அல்லது அம்மா உணவகம் போன்ற ஏற்பாட்டை மாமன்றத்தில் வைத்து தீா்மானம் நிறைவேற்றித் தொடங்க முயற்சிப்போம் என்றாா் அவா்.

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்திய 12 போ் கைது! விசாரணையின்போது இளைஞா் உயிரிழப்பு!

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்தியதாக 13 இளைஞா்களை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் பிடித்து மேல்விசாரணை நடத்தியபோது ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை பெரியாா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா். திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அல... மேலும் பார்க்க