பெண் டிஐஜியிடம் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ மோசடிக்கு முயற்சி சைபா் குற்றப்பிரிவு விசாரண...
புதுக்கோட்டையில் மருத்துவா்கள் போராட்டம்
சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் புகுந்த ஒருவா், அரசு மருத்துவா் பாலாஜியைக் கத்தியால் குத்தினாா். இந்தச்சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய மருத்துவ ச்சங்கம் புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவச் சங்க மாவட்டத் தலைவா் முகமது சுல்தான், செயலா் ராஜா, பொருளாளா் கோபாலகிருஷ்ணன், தனியாா் மருத்துவமனைகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கே.எச். சலீம் உள்ளிட்டோரும் பேசினா்.
மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.