புதுச்சேரியில் இன்றுமுதல் 2 நாள்களுக்கு குழந்தைகள் திரைப்பட விழா!
புதுச்சேரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து குழந்தைகள் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளா் முருகவேல் ராஜா வெளியிட்ட அறிக்கை: புதுவை அறிவியல் இயக்கம், புதுவை அலையன்ஸ் பிரான்சே நிறுவனம் இணைந்து 13 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த விழாவை நடத்துகின்றன. இந்த விழா புதுவை அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தில் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடக்கிறது.
இந்தத் திரைப்பட விழா தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 30 படங்கள் திரையிடப்படுவதால் குழந்தைகளுக்கு விருந்தாக இருக்கும். அனிமேஷன் படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் உள்பட பல்வேறு வகையான திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.