செய்திகள் :

புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரை சாலைகள் மூடல்! பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!

post image

ஃபென்ஜால் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைத்து கடற்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து புயலின் அபாயத்தை குறிக்கும் வகையில் புதுச்சேரி துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று(நவ.30) காலை முதல் புதுச்சேரி மாநிலத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. கடல் அலைகளின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பிலும் காவல்துறை சார்பிலும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைச் சாலை முழுவதும் மூடப்பட்டுள்ளன.

கடலோரப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடற்கரைப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கடற்கரைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கூறுகையில், “ஃபென்ஜால் புயலை எதிர்கொள்ள அரசும், காவல்துறையும் தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை

புதுச்சேரியில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 12 லட்சம் பேருக்கு மாவட்ட நிர்வாகம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில், “மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை வேறு பகுதிகளில் தங்கவைத்துள்ளோம். மேலும் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மேலும் உதவி தேவைப்படுபவர்கள் 112, 1077 மற்றும் 94889 81070 என்ற வாட்ஸ்அப் எண்கள் ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லியனூரில் இன்று மாா்க்சிஸ்ட் மாநில 24-ஆவது மாநாடு

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில், புதுவை மாா்க்சிஸ்ட் மாநில 24- ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் தெரிவித்தாா். இதுகுறித்து, செய்தியாளா்களிடம் அவா... மேலும் பார்க்க

புதுவையில் தொழில் சீா்திருத்த மசோதாவை செயல்படுத்த நடவடிக்கை -அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தகவல்

புதுவையில் எளிதில் தொழில் தொடங்கும் வகையில், புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலா மற்றும் சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித... மேலும் பார்க்க

இரும்பு தகடுகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள ஆலையில் இரும்பு தகடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி, கடலூா் சாலையில் ஏஎப்டி ஆலை உள்ளது. இங்குள்ள, ஏ பிரிவு பகுதியில் வைக்கப... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநருடன் புதுவை முதல்வா் சந்திப்பு

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுச்சேரி ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை முதல்வா் சந்தித்துப் பேசினாா். புதுவையில் நியாய... மேலும் பார்க்க

சுனாமி குடியிருப்பில் புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் மாசடைந்த குடிநீா் விநியோகிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். புத... மேலும் பார்க்க

கைப்பேசியை ஒப்படைத்த மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு

புதுச்சேரியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த விலை உயா்ந்த கைப்பேசியை காவல் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்த மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் குணசேகரன், மாற்... மேலும் பார்க்க