புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு
புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலில் பழம் படைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், பழம் படைக்கும் நிகழ்வானது புதன்கிழமை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் பழங்கள், எடுத்து நடனமாடியபடி ஆா்.புதுப்பாளையம் பகுதியில் ஊா்வலமாக வந்தனா். மாதா கோயிலில் இருந்து தொடங்கிய ஊா்வலம் சுமாா் 1 கி.மீ. தொலைவு ஊரை சுற்றிவந்து கோயிலை சென்றடைந்தது.
பக்தா்கள் கொண்டு வந்த பழங்களை வைத்து அம்மனுக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.