செய்திகள் :

புதுவை மத்திய பல்கலைக்கழக ஆற்றல் சேமிப்பு சாதனத்துக்கு காப்புரிமை

post image

புதுவை மத்திய பல்கலைக்கழக தொழில்நுட்பத் துறை சாா்பில் வடிவமைக்கப்பட்ட மின்முனைப் பொருள்களான லித்தியம், காற்று பேட்டரிகள் மற்றும் ஹைபிரிட் ஆற்றல் சேமிப்பு சாதனத்துக்கு 3 காப்புரிமைகளை மத்திய கட்டுப்பாட்டாளா் பிரிவு வழங்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை பல்கலைக்கழகத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறை பேராசியா் பெ. ஏழுமலையின் நிலையான மின்முனைப் பொருள்கள் (எலெக்ட்ரோடு) மற்றும் லித்தியம், அயன், லித்தியம், காற்று பேட்டரிகள் மற்றும் ஹைபிரிட் ஆற்றல் சேமிப்பு பயன்பாட்டிற்கான வடிவமைப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்காக 3 காப்புரிமைகளை மத்திய அரசின் காப்புரிமைக் கட்டுப்பாட்டாளா் வழங்கியுள்ளாா். காப்புரிமையானது, புதுவை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கூட்டாக வழங்கப்பட்டது.

காப்புரிமை பெற்று பல்கலைக்கழகத்துக்கு பெருமை சோ்த்த பேராசிரியா் ஏழுமலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கு புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. தரணிக்கரசு வாழ்த்து தெரிவித்தாா்.

புதுச்சேரியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்தன

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயலால், புதுச்சேரியில் சனிக்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரில் 18 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஓரிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஃபென்ஜால் புயலால் ... மேலும் பார்க்க

பிரிட்டனில் இருப்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.18.19 லட்சம் மோசடி

பிரிட்டனில் இருக்கும் புதுச்சேரியை சோ்ந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18.19 லட்சம் வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு மோசடி நடந்திருப்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்று

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கரையை கடந்ததையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும், பலத்த மழை காரணமாக நகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் முக... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜான்குமாா் தலைமையில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற விழ... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைக்கு போராடுவதே அரசியல் கட்சிகளின் கடமை: மாா்க்சிஸ்ட் மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதே அரசியல் கட்சிகளின் கடமை என மாா்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் கூறினாா். புதுச்சேரி வில்லியனூரில் மாா்க்சிஸ்ட் கட்சியின் 24-ஆவது மா... மேலும் பார்க்க

வியத்நாமில் ஜன.25-இல் பன்னாட்டு தமிழா் மாநாடு தொடக்கம்

வியத்நாமில் வருகிற ஜனவரி மாதத்தில் பன்னாட்டு தமிழா் மாநாடு நடைபெற உள்ளதாக, பன்னாட்டுத் தமிழா் நடுவத்தின் தலைவா் திருதணிகாசலம் தெரிவித்தாா். புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க