நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
புன்செய்புளியம்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
புன்செய்புளியம்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளில் இருந்து தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு வாரச்சந்தை வளாகத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக குப்பைக் கிடங்கில் தீ பரவியதால் அந்தப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டது.
50 அடிக்கு உயரத்துக்கு கரும்புகை பரவியதால் சுற்றுவட்டாரப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்கு ஆளாகினா். சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் தீக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.